7 மாவட்டங்களில் வெளியாகாத விஸ்வரூபம் 2 – வெளியான அதிர்ச்சி காரணங்கள்.!

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி இருந்த படம் விஸ்வரூபம் 2. உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் தமிழகத்தில் மட்டும் 7 மாவட்டங்களில் வெளியாகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.மதுரை, தேனீ, திண்டுக்கல், கடலூர், ராமநாதபுரம், விருது நகர், சிவகங்கை மற்றும் புதுசேரி மாநிலத்தில் இந்த படம் வெளியாகவில்லை என நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகின்றனர். தயாரிப்பு நிறுவனத்திற்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் படம் ரிலீஸாகவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட 60-க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் வெளியாகாததால் படக்குழுவினருக்கு ரூ 4 முதல் 5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. Your browser does not support iframes.

Kollywood