பிரபாஸுடன் கூட்டணி போடும் அட்லீ – எப்போ? என்ன படம் தெரியுமா?

தளபதி விஜயை வைத்து தெறி என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் தளபதி விஜய், இந்த படத்திற்கு பிறகும் விஜயுடன் இணைய காத்திருந்து மெர்சல் என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்தார்.இதனையடுத்து விஜயை இயக்க ஆசைப்படுவதாக அட்லீ கூறி வருகிறார், ஆனால் இது குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது அட்லீ அடுத்ததாக பாகுபலி பிரபாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.இவர்கள் இருவரும் இணைவதற்காக மெர்சல் படத்திற்கு முன்னதாகவே பிரபாஸை சந்தித்ததாகவும் அப்போது அவர் பாகுபலி-2 படத்தில் பிஸியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த படத்தில் பிரபாஸை இயக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த படத்திற்கும் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதுவார் எனவும் கூறப்படுகிறது.

Kollywood