நாச்சியாரின் தே- வார்த்தை வசனத்தால் யாருக்கு பாதிப்பு? – நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் நாச்சியார் படத்தின் டீஸர் ஒற்றை வசனத்துடன் வெளியாகி இருந்தது.அந்த ஒற்றை வசனமும் தே என தொடங்கும் கெட்ட வார்த்தையாக இருந்ததால் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பாலா மற்றும் ஜோதிகா மீது சிலர் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த கரூர் குற்றவியல் நீதிமன்றம் இந்த வார்த்தையால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது என கேள்வி எழுப்பி அந்த பட்டியலை வரும் டிசம்பர் 11-ம் தேதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.இந்த வழக்கை இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த பாண்டியன் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kollywood

ஓவியாவால் திணரப்போகும் OMR – விஷயம் என்ன தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தனது துணிச்சலான துட்டித்தனமான செயல்களாலும் புறம் பேசாத உண்மையான மனதாலும் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து சென்றவர் ஓவியா.இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு பின்னர் அடுத்தடுத்த ...