தினேஷ் – நந்திதா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் 'உள்குத்து' ரிலீஸ் அறிவிப்பு!

தினேஷ் மற்றும் நந்திதா நடிப்பில் , கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘உள்குத்து’. ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ஹிட் கொடுத்த இயக்குனர் கார்த்திக் ராஜு நடிகர் தினேஷோடு இணைவதும் , ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு நடிகர்கள் தினேஷும் நந்திதாவும் இணைவதும் இது இரண்டாவது முறையாகும். ‘உள்குத்து’ படத்தை ‘P K Film Factory’ G விட்டல் குமார் அவர்களும் G சுபாஷினி தேவி அவர்களும் தயாரித்துள்ளனர். ‘உள்குத்து’ படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திரு. G விட்டல் குமார் பேசுகையில், ” தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருமளவு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட வெற்றிபெற்ற தரமான படைகள் இதற்கு சான்று. இந்த நிலையில் ‘உள்குத்து’ படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம். இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் இயக்குனர் கார்த்திக் ராஜு மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார். நல்ல கதைகளை தேடி தேர்வு செய்து நடிக்கும் தினேஷ் இப்படத்தில் அசத்தியுள்ளார். வணிக தரப்பிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடுவதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமா ரசிகர்கள் ‘உள்குத்து’ படத்தை ரசித்து மகிழ்ந்து ஆதரவளிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன் ”.

Kollywood

Samantha's wedding 6 Oct?

Sources say that Samantha and Nag Chaitany way eventually tie the wedding knot on 6 October.Nag Chaitanya says that their wedding will take place in ...